திமுக அயலக அணியினர் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா செய்தியாளரிடம் கூறியதாவது….
திமுக 62 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்று கொண்டிருக்கிறது, திமுகவின் அயலக அணி போதைபொருள் கடத்த மட்டுமே வைத்துள்ளனர் என்று எண்ணினோம் ஆனால் தற்போது தேசவிரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது.
இந்தியாவின் இரு மாநிலங்கள் இல்லாமல் ஒரு இந்திய வரைபடத்தை திமுக அயலக அணியினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், திமுகவில் சிறுபிள்ளைகள் தலையீட்டால் பல சிக்கல்கள் உருவாகி வருவதாக திமுகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்,
உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பற்றி பேசிய பேச்சு மோசமானது. ஆளுநரை அடிப்பேன் என்று வகையில் உள்ளது. இந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக எதிர்வினை ஆற்றினால் என்னவாக இருக்கும் என தெரிவித்த அவர், திமுகவின் தலைமை ஒரு கீழ்த்தரமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.