உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறைக்கான இயக்குனர் கிருஷ்ணா, செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும் என கூறினார்.
இந்தியாவின் பொருளாதார அடித்தளம் நன்றாக இருக்கிறது எனக்கூறிய அவர், சில சீரற்ற தன்மை இருந்தபோதிலும் உணவு பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் 4.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்தார்.
உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என பாராட்டு தெரிவித்த அவர், வளர்ச்சிபெற நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, 2019-2020ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.