பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக, சென்னை பூங்கா – தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை- ஆவடி- திருவள்ளூர் இடையேயும்,
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.