பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதை அடுத்து பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் தவெக-வின் பதிவுக்கு எதிர்ப்புகள் இருந்தால் அதனை தெரிவிக்குமாறு அறிவித்திருந்தது. ஆனால் எந்த எதிர்மனுக்களும் பெறப்படாததால் தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அறிவிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் அனுப்பியுள்ளது.