விக்கிரவாண்டி தவெக மாநாடு - முக்கிய நிகழ்வுகள்!
Jul 5, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விக்கிரவாண்டி தவெக மாநாடு – முக்கிய நிகழ்வுகள்!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த 6 மாதமாக பேசு பொருளாக இருந்த நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற கொள்கை அறிவிப்பு மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் பிற்பகல் 3.15 மணியளவில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநாட்டு மேடையில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வள்ளிக் கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சரியாக மாலை 4 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பி விஜய்யை வரவேற்றனர்…..

மேடைக்கு வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி கையசைத்த விஜய், பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த Ramp தளத்தில் நடந்து சென்றார். அப்போது விஜய்யை நோக்கி தொண்டர்கள் சிலர் கட்சி சின்னம் பொறித்த துண்டை வீசினர்.

Ramp மீது விழுந்த கட்சித் துண்டை எடுத்து தனது தோளிப் போட்டுக் கொண்டே நடந்து சென்ற விஜய், தொண்டர்களை பார்த்து கையசைத்து மீண்டும் மேடைக்கு திரும்பினார்…

அதன் தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைத் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப் போர் தியாகிகளுக்கு மேடையில் மரியாதை செலுத்தினார் விஜய்….

சரியாக மாலை 4.25 மணிக்கு 101 அடி உயர கொடிக் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார்.

மாலை 4.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மாநாட்டில் ஒலித்தது….

அதன் தொடர்ச்சியாக த.வெ.க. பொருளாளர் வெங்கட் ராமன் உறுதி மொழியை வாசிக்க, தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதி ஏற்றனர்.

மாநாட்டுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக பொதுச் செயலாளர் புதுவை என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது….

 

Tags: Vijayvikaravanditamilaga vetri kalagamtamilaga vetri kalagam conference
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாடு – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

Next Post

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை – விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!

Related News

பாகிஸ்தானில் மூடப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை!

இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies