அமைச்சரவையில் பங்கு வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் துணை பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தவெக மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
திமுக தொடங்கியது முதல் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைத்ததாக தெரிவித்துள்ள அவர், அமைச்சரவையில் இடம் அளித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு முன் உதாரணமாக திகழ வேண்டுமென சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.