விழுப்புரம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பாணாம்பட்டு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தாமன 4.27 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலைத்தில் செந்தில் என்பவர் மணலை அள்ளி செங்கல் சூளைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செந்திலிடம் அப்பகுதியினர் கேள்வி எழுப்பினால் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. எனவே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.