சென்னையில் 3 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.
சென்னை காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றன. அதன்படி, நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டது. காவல் உதவி ஆணையர் பரத், ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் புழல் உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோர் பசுமைவழிச் சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகினர். அதேப்போல், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வழக்கில் காவல் உதவி ஆணையர் சச்சிதானந்தமும் ஆஜரானார்.