உலக பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் நெல்லைப்பர் – காந்திமதிய அம்பாள் ஆலயம் உள்ளது. இங்கு திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 15 நாட்கள் சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் கோயில் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் பேரவை சார்பில் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இறுதியாக நவம்பர் 1-ம் தேதியன்று மறுவீடு பட்டின பிரவேச நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.