அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தேசம் முழுவதும் செயல்படும் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தேசம் முழுவதும் செயல்படும் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் இயக்கம்.
50 ஆண்டுகள் கடந்து 51 ஆம் ஆண்டில் தனது தேசப் பணியை துவக்கும் நிகழ்ச்சி, திருச்சி ஸ்ரீ ரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாலை 4.15 நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.