விஜயின் மாநாடு புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளதாகவும், விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் குடும்ப திருமண வரவேற்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
புரிந்து கொள்ள முடியாத நிலையில் மாநாடு நடத்தி முடித்து உள்ளார் விஜய் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
குளத்தில் குளிக்க சென்ற பிறகு உடலில் தண்ணீர்பட கூடாது. ஆனால் குளிக்க வேண்டும் என்றால் அது கேலிக்குரிய ஒன்று. எனவே அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
இது அவருக்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஆட்சியில் பங்கு பெறுவோம் என சிலர் கூறி வருகின்றனர். அந்த நேரத்தில் விஜய் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல் முறையாக கூறி இருப்பது வரவேற்க்கத்தக்கது.
அதே நேரத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் கள பணியாற்ற வேண்டும். ஆட்சிக்கு வரும் முன்பே கூறுவது ஆணவத்தை காட்டுகிறது.
எம்ஜி ஆர் அதிமுகவில் இருந்து நீக்கபட்டபோது மக்கள் மத்தியில் எழுச்சி இருந்தது. எண்டிஆர் கட்சி துவங்கியபோது அங்குள்ள மக்கள் அவரை வாழும் கண்ணானாக பார்த்தார்கள். கடவுளுக்கு நிகராக கருதப்பட்டார் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.