முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் பிரவீன் சமாதானம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திமுக கொடி மற்றும் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.
மேலும், நடுநிலையாக செயல்பட வேண்டிய துணை முதலமைச்சர், கட்சியின் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கட்சி சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அரசியலமைப்பு சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.