திருப்பூரில் கடந்த 6 மாதமாக நூல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், தற்போது அனைத்து ரக நூல்களின் விலையும் 10 ரூபாய் குறைந்துள்ளது.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளது. அதன்படி, கிலோவுக்கு 10-வது நம்பர் நூல் 266 – ரூபாய்க்கும், 16-ம் நம்பர் நூல் விலை 270 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல, அனைத்து ரக நூல்களுக்கும் 10 ரூபாய் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், இந்த விலை குறைப்பு, தொழில் துறையினரை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.