அதிபர் தேர்தலின் முடிவு எதிர்பார்த்தது போல அமையவில்லை என கமலா ஹாரிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 270-க்கும் அதிகமான எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார். இதனையடுத்து வாஷிங்டன் நகரில் உள்ள ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமது மீது ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதனால் தனது மனம் நன்றியால் நிரம்பியுள்ளதாகவும் கூறினார். தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படாதபோதும், நாம் தொடர்ந்து போராடும் பட்சத்தில் அமெரிக்காவுக்கான விடிவு காலம் பிரகாசமாக தோன்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.