புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு ரூபிகான் ரிசர்ச் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மருந்து துறை நிறுவனமான ரூபிகான் ரிசர்ச் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், ‘ஜெனரல் அட்லாண்டிக்’ நிறுவனத்தின் வசமுள்ள தன் பங்குகள் விற்பனை வாயிலாக 585 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதேபோல, சாய் லைப் சயின்சஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 800 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பங்குதாரர்கள் வசமுள்ள 6 புள்ளி 15 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. மும்பையை சேர்ந்த சனாதன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக 300 கோடி ரூபாயும் திரட்டவிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல டெல்லியை சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான மெடல்மேன் ஆட்டோ, 350 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.