சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேட்டியளித்தார்.
அப்போது, சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறவில்லை எனவும், தமிழக அரசிடம் இதற்கு எந்த திட்டமும் இல்லை என்றும் விமர்சித்தார்.
எங்கெல்லாம் பிரச்னை உள்ளதோ அங்கெல்லாம் வெள்ளம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, 2020 இல் ஆரம்பித்து 500 கிலோ மீட்டர் கூட இந்த பணிகள் முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டார்.