சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முதியவர் மீது தனியார் பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. கலியனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது பேருந்து மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் கவிழ்ந்த பேருந்து சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து, பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.