வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.