ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் சாலையோரம் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி விவசாயிகள் மிளகாய் செடி நடவு செய்து அறுவடைக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் மிளகாய் செடிகள் கருகத் தொடங்கின.
இதையடுத்து சாலையோரம் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை சேகரிக்கும் விவசாயிகள், அவற்றை தொலைதூரம் எடுத்துச்சென்று மிளகாய் பயிர்களுக்கு உபயோகித்து வருகின்றனர். மேலும், பருவமழை முற்றிலுமாக பொய்த்துப்போனால் மிளகாய் பயிர்களை அறுவடை செய்யமுடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.