குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக தீ மளமளவென எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
















