தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளளார் .
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நகரின் மையப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இப்படி நடந்திருப்பதை ஏற்க முடியாது என்றும், அனைத்து நோயாளிகளையும் காப்பாற்ற கூடிய நிலையில் எல்லோருக்கும் சிகிச்சையும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உற்றார் உறவினர்களுடன் சென்று கத்தி குத்து நடத்தி இருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை காட்டுவதாகவும், மருத்துவமனைக்கு உள்ளே ஆயுதம் எடுத்து செல்ல அனுமதி வழங்கும் அளவிற்கு மருத்துவனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் தன்னுடைய இருக்கையில் அமராமல் ஊர் ஊராக சுற்றி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த கிருஷ்ணசாமி, முதல்வர் இருக்கையில் அமராமல் இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி கட்டுப்பாட்டில் இருக்கும் எனறும் அவர் கேள்வி எழுப்பினார்.