சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் - கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
Aug 19, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் – கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய்த்துறை மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தினார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து, முதுகு உள்ளிட்ட7 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்ததால், ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியன் முன்பு விக்னேஷை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

Tags: Kalaignar Centenary Super Speciality Hospitalvignesh arrrested15 days judiciala custodyguindydoctor balaji stabbed
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் – 66.48 % வாக்குப்பதிவு!

Next Post

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குல் – ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies