கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து நலம் விசாரித்தார்.
சென்னை கிண்டியிலுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, அங்கு வந்த ஒரு இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு, அரசியல் பிரமுகர்கள் உட்பட பலதரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.