தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது-
இதன் காரணமாக, தமிழகத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.