பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்தது தெரியவந்துள்ளது.