நைஜீரியா, பிரேசில், கயானா பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன் - பிரதமர் மோடி
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரியா, பிரேசில், கயானா பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைஜீரியா, பிரேசில், கயானா பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.

அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நமது  கூட்டாண்மையை உருவாக்க இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பியுள்ள இந்திய சமூகத்தினரையும், நைஜீரியாவைச் சேர்ந்த நண்பர்களையும் சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பிரேசிலில், 19-வது ஜி-20 உச்சிமாநாட்டில் முக்கூட்டு உறுப்பினராக நான் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு, இந்தியாவின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பு, ஜி-20-ஐ மக்களின் ஜி-20 ஆக உயர்த்தியது.

உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை அதன் நிகழ்ச்சி நிரலில் பிரதான நீரோட்டத்தில் சேர்த்தது. இந்த ஆண்டு, பிரேசில் இந்தியாவின் பாரம்பரியத்தைக் கட்டமைத்துள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன்.  அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில் கயானாவுக்கு நான் மேற்கொள்ளும் பயணம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இருக்கும்.

பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த நமது தனித்துவமான உறவுக்கு உத்திசார் திசையை அளிப்பது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.

185 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த  மிக வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எனது மரியாதையையும், ஜனநாயக சகா என்ற அளவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவிப்பேன்.

இந்தப் பயணத்தின்போது, 2-வது இந்தியா- கரீபியன் சமுதாய  உச்சிமாநாட்டில் பங்கேற்கும் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்க உள்ளேன்.  நாங்கள் நெருங்கிய உறவுகளால் ஒன்றாக வலுவுடன் நிற்கிறோம்.

வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், நமது ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு நமக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Global SouthBrazilprime minister modiNigeriaGuyanaPresident Bola Ahmed Tinubu.
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 % மக்கள் விருப்பம் – ஆய்வில் தகவல்!

Next Post

விமானத்தில் புகை பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies