அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அரசு திறன் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டன் அரசு நிர்வாகத்தில் உள்ள பல லட்சம் பேரை அகற்றும் பணியை எலான் மஸ்க் மற்றும் தாமும் தொடங்கவுள்ளதாக விவேக் ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் அதிகளவில் இருந்தால், புதுமைகள் எதுவும் ஏற்படாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்க திறன் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஒவ்வொரு வாரமும் அமெரிக்க மக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்வோம் எனவும் விவேக் ராமசாமி குறிப்பிட்டார்