பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த திட்டத்தின் வாயிலாக உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற பயிர்களின் உற்பத்தி செலவுக்கு 50 சதவீத லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதன் மூலம் சில்லறை விற்பனையில் விலை குறைந்தாலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாது என தெளிவுபடுத்தினார்.