அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மூன்றறை ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என, திமுகவின் கூட்டணியில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி குற்றம்சாட்டியுள்ளார்.
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, இலங்கையில் சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதன் கருப்பொருளை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வந்து தமிழகத்தையும், தொழிலாளர்களை சுரண்டுவதை திமுக அரசு தொழில் வளர்ச்சி எனக் கூறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
சாம்சங் நிறுவனத்திடம் தமிழக அரசு சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்ட நாகை மாலி, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற முறையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.