நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நவம்பர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும், வக்ஃபு வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.