பாலப்பட்டி ஊராட்சி கூத்தாங்கல்பட்டியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது குடகனாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதனையடுத்து பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு பகொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பாலம் முழுவதும் தண்ணீரில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தேங்கிய நீரில் நடந்தபடி பாலத்தை கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாலம் முறையாக கட்டப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பாலத்தை அகற்றி, உயரமாக புதிய பாலம் அமைத்துதர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.