மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே இரு முனைப்போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் 4 ஆயிரத்து 140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 9 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மும்பை, பூனே உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை முதலே
வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள், தொழில் அதிபர்களும் வாக்களித்தனர்.