கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், “ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தன்னுடைய முடிவை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். நடிகர்கள் தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி ஆகியோரை தொடர்ந்து ஏர்.ஆர்.ரகுமான் வீட்டிலும் விவகாரத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.