திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கொட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி - அண்ணாமலை
May 20, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கொட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி – அண்ணாமலை

Web Desk by Web Desk
Nov 20, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும்  நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது,  சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaitamilnadu bjp presidentDMK governmentKallakurichi casechennai highcourtkallakuriche case handed to cbi
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை விவகாரம் – மாநகராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Next Post

திருமண வாழ்வு 30 வயதை எட்டும் என நம்பினேன் – ஏ.ஆர். ரகுமான்

Related News

நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு!

துணைநிலை ஆளுநர் மீது எந்தவொரு அதிருப்தியும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!

வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை : நடிகர் சூரி

இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி – எர்ரானி ஜோடி சாம்பியன்!

சுப்மன் கில்லுக்கு எதிரான விமர்சனம் – ரவி சாஸ்திரி பதில்!

சிம்புவின் 51-வது படம் : படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

விமர்சையாக நடந்த சூர்யா 46 படத்தின் பூஜை விழா!

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,683 கன அடியாக உயர்வு!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies