தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என நம்பியதாகவும், ஆனால் அனைத்தும் கண்ணுக்கு புலப்படாத விஷயங்களாக உள்ளதாகவும் , ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடைந்த இதயங்களை மீண்டும் சேர்க்க முடியாது என்ற போதிலும், அதற்குரிய காரணத்தை தேடுவதாக கூறியுள்ளார்.