மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் - சிறப்பு கட்டுரை!
May 18, 2025, 05:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 23, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ? அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் ரஷ்யா என்ன விதமான புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் 1,000 நாட்களை கடந்துள்ளது. இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் நிற்கின்றன.

போர் தொடங்கிய நாளில் இருந்தே, ரஷ்யா மீது தாக்​குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வருகின்றன.

நீண்ட தூரம் சென்று இலக்​குகளைத் துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணை​களை ரஷ்ய எல்லைக்குள் செலுத்தி தாக்குதல் நடத்தக் கூடாது என்று உக்ரைனுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருந்தது.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு உதவுவதை மேற்​கத்திய நாடுகள் நிறுத்த வேண்​டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறி வந்தார். எனினும், மேற்​கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன.

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடு​கள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணையை பயன்​படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்​கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்றும் அதிபர் புதின் எச்சரித்​திருந்​தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடையும் நிலை​யில், நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளைப் பயன்​படுத்த உக்ரைனுக்கு ஜோ பைடன் அனுமதி வழங்கி இருக்கிறார்.

நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கிய அடுத்த நாளே உக்ரைன் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஏவிய ஐந்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சூழலில், 2020 ஆம் ஆண்டில் அதிபர் புதினின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாட்டில் புதிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்​படி, அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அணு ஆயுதம் இல்லாத நாடுகள், ரஷ்யா மீது தாக்​குதல் நடத்தினால் , பதிலுக்கு அந்நாட்​டின் மீது ரஷ்யா​ அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் என்றும், ரஷ்ய ஆயுத கொள்கையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது.

குறிப்​பாக, பாலிஸ்​டிக் ஏவுகணை உட்பட நவீன ஏவுகணை​கள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்​வழித் தாக்​குதல் மேற்​கொள்​ளப்பட்டாலும், பதிலுக்கு ரஷ்யா அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களால் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எல்லையைத் தாக்கினாலும், வெளிநாட்டில் உள்ள ரஷ்ய ராணுவப் பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும், முக்கியமான ரஷ்ய அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவம் மீது தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல்,ரஷ்யா மற்றும் பெலாரஸின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ராணுவ அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான தாக்குதல்களை நடத்தினாலும் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன் படுத்தவும் அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

சூழ்​நிலைக்கு ஏற்ப அணு ஆயுதக்கொள்​கை​களில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ள ரஷ்ய அதிபர் மாளி​கை​யின் செய்தித் தொடர்​பாளர், அணு ஆயுதங்களைப் பயன்​படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்றும் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்தும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

ரஷ்யாவின் அதிரடி முடிவால் ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது. மூன்றாம் உலகப்போர் அச்சத்திலும், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், பல நாடுகள் தத்தம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக , ரஷ்ய அதிபர் புதின் தனது மக்களுக்காக ‘mobile nuclear bunkers’ என்னும் நடமாடும் பாதுகாப்புப் பேழைகளை பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். 300,000 பவுண்டுகள் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த பாதுகாப்புப் பேழைகளில் 54 பேர் வரை தங்கலாம் என்றும், தேவை அதிகரிக்கும் பட்சத்தில், 150 பேர் தங்கும் வகையில் அதை மாற்றி அமைத்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதுகாப்புப் பேழைகளை வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிய வருகிறது.

ரஷ்யாவிடம் சுமார் 5,889 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை ஏவுகணைகள் மூலமாகவும், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்தும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: UkraineRussia Ukraine warRussian president putinthird world warnuclear weapons
ShareTweetSendShare
Previous Post

எலான் மஸ்கின் STAR SHIP : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா – சிறப்பு கட்டுரை!

Next Post

பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies