எலான் மஸ்கின் STAR SHIP : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா - சிறப்பு கட்டுரை!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எலான் மஸ்கின் STAR SHIP : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரை மணிநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வகைசெய்யும் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டத்துக்கு, அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பு…..

ஒரு காலத்தில் தூர தேசங்களுக்குச் செல்ல கப்பல்களைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வாரக் கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட ஆகும். இருபதாம் நூற்றாண்டில் விமானங்கள் வந்த பிறகு பயண நேரம் ஒருசில நாட்களாகவும், சில மணி நேரங்களாகவும் மாறியது.

அதை மேலும் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றே SPACE X நிறுவனர் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டம். இதற்காக பெரிய SPACE CRAFT-ஐ அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

பொதுவாக பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்வதற்காகத்தான் SPACE CRAFT-ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் பூமிக்குள்ளேயே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்காக SPACE CRAFT-ஐ தயாரித்திருக்கிறார் மஸ்க். இதன்மூலம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருந்து கனடாவின் டொரண்டோவுக்கு 24 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்கிறார்கள்.

அதே போல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு வர 30 நிமிடங்களே ஆகுமாம். நியூயார்க் – லண்டன் இடையிலான பயண நேரம் 29 நிமிடங்களாகவும், நியூயார்க் – ஷாங்காய் இடையிலான பயண நேரம் 39 நிமிடங்களாகவும் குறையுமாம்.

STAR SHIP திட்டத்துக்கு அனுமதி பெற எலான் மஸ்க் முயன்று வரும் நிலையில், தேர்தலில் தாம் வெற்றி பெற உதவிய அவருக்கு ட்ரம்ப் ஆதரவுக்கரம் நீட்டுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க திறன் துறையை கவனிக்கும் பொறுப்புக்கு மஸ்க்கை தேர்வு செய்திருக்கும் ட்ரம்ப், அதிபரானதும் STAR SHIP திட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் SPACE CRAFT மேலே எழும்போதும், கீழே இறங்கும் போதும் புவி ஈர்ப்பு விசையால் பயணிகள் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுபற்றிய ஆய்வில் SPACE X நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே STAR SHIP திட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “இனி இது சாத்தியம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: space xSTAR SHIP projectindia to us 30 minituesTorontoCanadaElon musk
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies