பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்தியா பவன் சார்பில் மார்கழி இசை விழாவை ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கிவைத்தார். இந்த மார்கழி இசை விழா அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கிலேயர்கள் நம் கலாசாரத்தை அழிக்க நினைத்து முடியாமல் போனதாகவும், பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நமது பண்பாடு உயிர்ப்புடன் விளங்கும் என்றும் தெரிவித்தார்.