அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான் அதிமுக தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் என்று தெரிவித்தார்.
கூட்டணி குறித்து தற்போது எதுவும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், நல்லதொரு கூட்டணி அமைக்கப்படும் என்பதை மட்டும் இந்த தருணத்தில் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் பேச முயன்ற போது,அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது.இதனையடுத்து அவரை ,அதிமுக நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.