விளாத்திகுளம் அருகே, அரசு பேருந்து சாலையோர நீரோடையில் கவிழ்ந்ததில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் செல்வக்குமார் ஓட்டி வந்துள்ளார். கழுகாசலபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, கியர் ராடு உடைந்து சாலையோரம் இருந்த நீரோடையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.