மோண்ட்ரீலில் நடந்துவரும் கலவரத்துக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், டொராண்டோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
அப்போது, நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் நகரில் பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொறுப்பற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.