திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில், விலங்குகள் கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக, ஆந்திர அரசு அமைத்த குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்தது.
மேலும், மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதிய குழுவை அமைத்தது. இக்குழுவைச் சேர்ந்த 14 பேர், ஏ ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.