‘பி.எம் கிஷன் யோஜனா’ என்ற மோசடி செயலியை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூகுள் பே, ‘போன் பே’ உள்ளிட்ட, யு.பி.ஐ., பயன்பாடு வாயிலாக, மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகளவில் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த அனுமதியில்லாத பணப்பரிவர்த்தனை பற்றிய விசாரணையில், ‘பி.எம் கிஷன் யோஜனா’ என்ற மோசடி செயலி பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த செயலி பல்வேறு சேனல்கள் வாயிலாக, வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டு வருவதாகவும், எனவே மொபைல் போனில் உறுதிப்படுத்தப்படாத செயலிகள் பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.