கும்பகோணம் அடுத்த சோழபுரம் பைரவேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பட்டு வஸ்திரங்கள் சமர்பித்தல், சீர்வரிசை தட்டுக்கள் சமர்பித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.