மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிக்கு அன்பு சகோதரி திட்டமும் முக்கிய காரணம் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு அன்பு சகோதரி திட்டமும் முக்கிய காரணமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும், இந்த அன்பு சகோதரி திட்டம் சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 5 மாத தவணை தொகையும் மொத்தமாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் 2.30 கோடி பெண்கள் பயன் பெற்றனர். மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால், அன்பு சகோதரி திட்டத்தின் உதவி தொகை 2 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டமே மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பாஜக அமோக வெற்றபெற காரணமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.