தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு நடைபெறும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவிலில், வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி முகாமை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து, பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.