மதுரை ஒத்தக்கடை அருக்கே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது ஏறி எடுத்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
மாங்குளம் மேட்டுக்காலனி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சின்னவீரி என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை பாலத்தின் மீறி ஏறி ஆபத்தான முறையில் உறவினர்கள் கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.