மயிலாடுதுறையில் துணை முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
நாகங்குடி பகுதியில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணை முதல்வரை வரவேற்க ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன.
ஆனால், அனைத்து பேனர்களும் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது. மேலும், பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் திருப்பி வைக்கப்பட்டன. இதனால், திமுகவில் உட்கட்சி பூசல் என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுதுள்ளது.