தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கோயிலுக்குள் புகுந்து கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மானம்பாடி கிராமத்தில் வடபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததுடன், 4 அம்மன் சிலைகளின் கழுத்தில் இருந்த சுமார் இரண்டரை சவரன் எடை கொண்ட நகைகளையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழபுரம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.