கூட்டுறவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதற்கான நினைவு தபால் தலையையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில், பூடான் பிரதமர் டெஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணை பிரதமர் மனோ கமிகமிகா, மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவு துறையில் இந்தியாவின் அனுபவம் 21-ஆம் நூற்றாண்டில் பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பெண்கள் தலைமை வகிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், கூட்டுறவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு 60 சதவீதமாக இருப்பதாகவும், அதை மேலும் உயர்த்துவோம் என்றும் உறுதியளித்தார்.